தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் புதுமைகளைப் புகுத்த முயலும் மாநில அரசு இதற்காகத் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே நாட்டின் ஐடி துறை அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் இந்த துறையில் முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

Published Date: September 8, 2024

CATEGORY: ECONOMY

மாற்றி யோசிக்கும் பிடிஆர்.. "இதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலமே.." சுடசுட ரெடியாகும் தெறி மாஸ் திட்டம்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் புதுமைகளைப் புகுத்த முயலும் மாநில அரசு இதற்காகத் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே நாட்டின் ஐடி துறை அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் இந்த துறையில் முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்தியாவிலேயே தொழிற்துறையில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. சர்வதேச நிறுவனங்கள் பலரும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களை ஊக்குவிக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழிற்துறை: தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் துறைகள் இருந்தாலும், அதில் ஐடி துறை மிக முக்கியமானது. ஏனென்றால் நாட்டின் மற்ற மாநிலங்கள் கம்ப்யூட்டரை புரிந்து கொள்ளும் முன்பே, ஐடி கொள்கையை வெளியிட்ட மாநிலம் தான் தமிழ்நாடு. சரியான நேரத்தில் சரியான கொள்கைகளை வகுத்து வெளியிட்டதாலேயே தமிழ்நாட்டில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் முதலீடு செய்தன.

இப்போது தமிழ்நாடு அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது. இதில் ஐடி துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

அமைச்சர் பி.டி.ஆர்: தமிழகத்தின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நனவாக்கப் புதுயுக மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கியமானவை என்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். வரும் காலத்தில் மாநிலத்தில் புதுமைகளின் வடிவமைப்பதில் இந்த துறைகள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் தொழில் மாநாட்டில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். இந்த கருத்துகளைக் கூறினார். இது தொடர்பாக புதிய தொழில்நுட்பக் கொள்கை (deep-tech policy) விரைவில் வெளியிடப்படும் என்ற அவர், இது மாநிலத்தில் வளர்ச்சியைத் துரிதப்படுத்த அரசுக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.

இது ஐடி துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறுகையில், "மிக விரைவில் deep-tech policy வெளியிடப்படும். இதில் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும். உள்கட்டமைப்பு அல்லது இயங்க தேவையான ஆதரவை அரசு வழங்கும்" என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்: மாநிலத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, முதல்வர் ஸ்டாலின் இதற்காகத் தான் இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். மேலும், இதுவரை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. முதல்வரின் பயணத்தில் மேலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Media: tamil.oneindia.com